Monday, August 20, 2018

7. பஞ்சாங்கம்.


கிழமைகள்- 7.














ஞாயிறு - ஆதிவாரம், பானுவாரம் - 1 கண்.
திங்கள் - சோமவாரம், இந்துவாரம் - 1 கண்.
செவ்வாய் - மங்கலவாரம் - குருட்டு நாள்.
புதன் - புதவாரம், சௌமியவாரம் - 2 கண்.
வியாழன்,குருவாரம் - 2 கண்.
வெள்ளி - சுக்கிரவாரம் - 2 கண்.
சனி - சனிவாரம் , மந்தவாரம் சிரவாரம் - குருட்டு நாள்.


திதிகள் - (வளர்பிறை 15) (தேய்பிறை 15).

சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளிதான் திதி.

ஒரு திதி  12° டிகிரி  முதல் 15 திதி வரை  180° டிகிரி. (அமாவாசை).

மறுபடியும், 
ஒரு திதி  12° டிகிரி  முதல் 15 திதி வரை  180° டிகிரி. (பொளர்ணமி)

அல்லது, 




அல்லது,




திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன, அதன் 30 பெயர்களும் வருமாறு:

சுக்ல பட்சம் அல்லது வளர்பிறை. (15)


கிருஷ்ணா பட்சம் அல்லது தேய்பிறை. (15)




நட்சத்திரங்கள் - 27





1.அசுவினி Aswini
2. பரணி  Bharani
3. கார்த்திகை  Karthigai
4.ரோகிணி  Rohini
5. மிருகசிரீஷம்  Mrigasheersham
6. திருவாதிரை  Thiruvaathirai
7. புனர்பூசம்  Punarpoosam
8. பூசம்  Poosam
9. ஆயில்யம்  Aayilyam
10. மகம்  Makam
11. பூரம்  Pooram
12. உத்திரம்  Uthiram
13. ஹஸ்தம்  Hastham
14.  சித்திரை  Chithirai
15. சுவாதி  Swaathi
16. விசாகம்  Visaakam
17. அனுஷம்  Anusham
18. கேட்டை  Kettai
19.மூலம்  Moolam
20. பூராடம்  Pooraadam
21. உத்திராடம்  Uthiraadam
22. திருவோணம்  Thiruvonam
23.அவிட்டம்  Avittam
24.சதயம்  Sadayam
25. பூரட்டாதி  Poorattathi
26. உத்திரட்டாதி  Uthirattathi
27.ரேவதி  Revathi



1.அசுவினி       10.மகம்      19.மூலம்   (கேது)
2.பரணி         11.பூரம்      20.பூராடம்  (சுக்கிரன்)
3.கார்த்திகை    12.உத்திரம்   21.உத்திராடம் (சூரியன்)
4.ரோகிணி      13.ஹஸ்தம்   22.திருவோணம் (சந்திரன்)
5.மிருகசிரீஷம்   14.சித்திரை   23.அவிட்டம் (செவ்வாய்)
6.திருவாதிரை   15.சுவாதி     24.சதயம்   (ராகு)
7.புனர்பூசம்     16.விசாகம்   25.பூரட்டாதி (குரு)
8.பூசம்          17.அனுஷம்   26.உத்திரட்டாதி (சனீஸ்வரன்)
9.ஆயில்யம்      18.கேட்டை   27.ரேவதி (புதன்)






கரணம்.



1 கரணம் = 1/2  திதி.அல்லது, 
திதி = 2 கரணம்

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.
11 கரணப் பெயர்களும் வருமாறு:
  1. பவம்
  2. பாலவம்
  3. கௌலவம்
  4. சைதுளை
  5. கரசை
  6. வனசை
  7. பத்திரை
  8. சகுனி
  9. சதுஷ்பாதம்
  10. நாகவம்
  11. கிமிஸ்துக்கினம்.


யோகம்.

சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.
யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.
1. விஷ்கம்பம்10. கண்டம்19. பரிகம்
2. பிரீதி11. விருதி20. சிவம்
3. ஆயுஷ்மான்12. துருவம்21. சித்தம்
4. சௌபாக்கியம்13. வியாகதம்22. சாத்தீயம்
5. சோபனம்14. அரிசணம்23. சுபம்
6. அதிகண்டம்15. வச்சிரம்24. சுப்பிரம்
7. சுகர்மம்16. சித்தி25. பிராமியம்
8. திருதி17. வியாதிபாதம்26. ஐந்திரம்
9. சூலம்18. வரியான்27. வைதிருதி









No comments:

Post a Comment

11. நாழிகை

60  நாழிகை = 24 மணி நேரம். 30  நாழிகை = 12 மணி நேரம். 15 நாழிகை = 6 மணி நேரம். 7.5 நாழிகை = 3 மணி நேரம். 1 நாழிகை = 24 நிமிடம் 0.5  நா...